சென்னையில் இலங்கை தமிழர்கள் 11 பேர் கைது!

image_pdfimage_print

சென்னையில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்ததாக இலங்கையை சேர்ந்த 3 நபர்கள் உட்பட 11 நபர்களை சென்னை போலிஸார் கைது செய்துள்ளார்கள்.
சென்னை, மத்திய குற்றப்பிரிவின், போலிக் கடவுச்சீட்டு தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனிப்படை ஒன்று அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நடத்திய விசாரணையில் டிராவல்ஸ் உரிமையாளர் பெருங்குடியைச் சேர்ந்த வீரகுமார்(47) அவரது தம்பி எழும்பூரில் வசிக்கும் பாலசுப்ரமணியன்(45) கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஷெனாய் நகரைச்சேர்ந்த கார்த்திக்கேயன் (40) செங்குன்றத்தை சேர்ந்த சரவணன் (43) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரனை நடத்தினர்.
இதன் பின் விசாரித்த போது தமிழ்நாட்டில் பயனற்ற கடவுச்சீட்டுக்களை விலைக்கு வாங்கி அதில் தேவைபடும் இலங்கை நபரின் புகைப்படத்தை மாற்றி அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.
மற்றும் குற்றவாளிகளை விசாரிக்கும் போது சென்னையில் இலங்கை மக்களுக்கு உதவிய 4 நபர்களையும் மற்றும் சென்னையில் வாழும் இலங்கை தமிழர்கள் ஆன 3 நபர்களையும் கைது செய்தனர்.
மற்றும் இவர்களிடம் இருந்து 80 இந்திய போலிக் கடவுச்சீட்டுகளையும், போலி கடவுச்சீட்டு தயாரிக்க பயன்படுத்திய கருவிகள் மற்றும் 85,000 ரூபா ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யதவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.