போதைப்பொருள் கடத்தலுடன் படையினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு உண்டா?

போதைப்பொருள் கடத்தலுடன் படையினரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதை கடற்படையினரால் ஏன் தடுக்க முடியாதுள்ளது எனவும் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.
மேலும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கூறி, அவர்கள் போதைப்பொருளுடன் தொடர்புபட்டிருப்பதாக மக்கள் கூறுவதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தக் கருத்துக்களைக் கூறினார்.