முல்லையில் தொடரும் துடுப்பாட்ட சமர்கள்!!!

image_pdfimage_print
முல்லைத்தீவு முள்ளியவளையில் இன்று மாபெரும் மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது. இலுப்பையடி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 18 கழகங்கள் பங்குபெறும் துடுப்பாட்டச் சமர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெறும் என போட்டி ஒழுங்கமைப்பு குழு தெரிவித்துள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் மாமூலை டைமன் மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக அல்கிஷ்ரா கழகத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் முள்ளியவளை வளர்மதி விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது. 30 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் அல்ஜின்னா அணியினர் இரண்டாவது இடத்தைப் பெற்றனர்.
இச்சுற்றுப் போட்டியின் ஆட்டநாயகனாக சு.ஆரணியன் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தொடர் ஆட்ட நாயகன் விருதை சி.சுஜிபவன் தனதாக்கி கொண்டார்.