முள்ளிவாய்க்கால் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தனிநபர்  ஒருவரின் காணியினை துப்பரவு செய்யும் போது இரண்டு கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
27.06.18 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தனிநபர் ஒருவர் அவரது வீடு அமைந்துள்ள காணிப்பகுதியினை துப்பரவு செய்துள்ளார். இதன்போது நிலத்தினை தோண்டிய வேளை இரண்டு கைக்குண்டுகளை இனம் கண்டுள்ளார்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்திற்கு குறித்த வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்தமைக்கு அமைவாக முல்லைத்தீவு பொலீஸார் வழக்கு பதிவு செய்து அதனை நீதிமன்ற அனுமதியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.