சமையல் எரிவாயு விலை குறைப்பு!

சமையல் எரிவாயு விலை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 138 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,676 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,538 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 55 ரூபாயாலும், 2.3 கிலோகிராம் 25 ரூபாயாலும் குறைவடைகின்றது. வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.