முள்ளியவளை பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு!

29.06.18 அன்று முள்ளியவளை கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோததுப்பாக்கி வெடித்ததில் முள்ளியவளை 01ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22 அகவையுடைய மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியருகையில் முள்ளிவளை 01ஆம் வட்டாரம் ஈரான் என்ற பகுதியில் வசிக்கும் இளைஞன் 29 அன்று மாலை வேளை வேட்டைக்காக சட்டவிரோத துப்பாக்கியுடன் கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு மிருக வேட்டைக்காக துப்பாக்கியினை பயன்படுத்தியபோது துப்பாக்கி வெடித்து சிதறியதில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவரை நீண்டநேரமாகியும் காணத உறவினர்கள் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து முள்ளியவளை காட்டுப்பகுதிக்கு அருகில் இருப்பர்கள் வெடிச்சத்தம் கேட்ட திசையினை தெரிவித்துள்ளார்கள்.
இன்னிலையில் குறித்தகாட்டுப்பகுதியில் இளைஞன் உயிரிழந்த நிலையில் இருப்பதை அவனது நண்பர்கள் தேடி கண்டுபிடித்துள்ளதுடன் முள்ளியவளை பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளமைக்கு அமைவாக முள்ளியவளை பொலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தினை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறும் மேலதிக விசாரணைகள் நடைபெற்ற பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார்.