இனி வாகனத்தை வேகமாக ஓட்ட முடியாது: இலங்கை போலீசாரின் சாதூர்யம்!

இலங்கையில் வாகனத்தில் வேகமாக வருபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் ஒருவர் வித்தியசாமாக கண்டுபிடித்துள்ளார். 
இலங்கையில் புத்தளம் பகுதியில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், அங்குள்ள போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 
இந்நிலையில், தற்போது அங்குள்ள புத்தளம் – கொழும்பு சாலையில், கிரியன்கல்லியில் இருந்து கரிக்கட்டி வரையிலான ரோட்டில், போலீசாரைப் போன்று உருவத்தோற்றத்தில் இருக்கும் அட்டைப்படங்கள் சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. ஒரு போலீசார் வேகமாக வரும் வாகனங்களை கண்காணித்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு இந்த படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள், இந்த படங்களைப் பார்த்து பயந்து மெதுவாக செல்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.