உறங்கிகொண்டிருந்த தனது மனைவி பிள்ளைகளுக்கு கணவன் என்ன செய்தார் தெரியுமா?

image_pdfimage_print
தனது மனைவி மீது அமிலவீச்சு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்ற நபரொருவரை ஹங்வெல்ல காவற்துறையினர் இன்று கைது செய்தனர்.
ஹங்வெல்ல – வெலிகந்த – வத்தொலுவ வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த அவரின் மனைவி மீது இவ்வாறு அமலவீச்சு சந்தேகநபரால் கடந்த 26ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த நபர் தப்பிச்சென்றிருந்ததாக காவற்துறை தெரிவித்தது. 
குறித்த அமிலவீச்சு தாக்குதலில் மனைவி மற்றும் அவரின் இரண்டு பெண் பிள்ளைகளும் காயமடைந்துள்ள நிலையில் , காயமடைந்த மூவரும் தற்போது அவிசாவளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.