விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தவறான தெரிவு: எம்.ஏ.சுமந்திரன்

image_pdfimage_print
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை நியமிக்க எடுத்த தீர்மானம் தவறாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது,“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை.” என்றுள்ளார்.