விமானத்தில் திடீரென பிச்சை எடுத்த நபர்! அதிர்ச்சியான விமான ஊழியர்கள் செய்த செயல்! வீடியோ உள்ளே!


வழமையாக பிச்சைகாரர்கள் பஸ்களில் ஏரி பிச்சை எடுப்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.ஆனால் விமானமொன்றில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பிச்சைகாரர் ஒருவர் பிச்சை எடுத்த வினோத சம்பவம் கட்டார் எயார்வேய்ஸ் விமானத்தில் இடம்பெற்றுள்ளது.
கட்டாரின் டோஹா நகரிலிருந்து ஈரானின் ஷிராஸ் நகருக்கு புறப்படுவதற்கு மேற்படி விமானத்தில் பிளாஸ்டிக் தட்டை ஏந்தியவாறு நடுத்தர வயதுடைய அந்நபர் பிச்சை எடுத்துள்ளார்.
இதன்போது விமானித்தில் பயணம் செய்த சிலர் பணத்தை பிச்சையாக கொடுத்துள்ளனர்.இந்நிலையில் அங்கு வந்த விமான ஊழியர்கள் அவரை பிச்சை எடுப்பதை நிறுத்துமாறு வலியிறுத்தியபோதும் அதை கேட்காமல் அவர் மீண்டும் பிச்சை எடுத்துள்ளார்.
இதனால் விமான ஊழியர்கள் அவரை பலவந்தமாக வெளியேற்ற நேர்ந்தது. ஆகையால் விமானம் தாமதமாக பயணம் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் பயனம் செய்த நபர் பயணிகளில் ஒருவரா அல்லது அத்திமீறி விமானத்தில் ஏறினாரா என தகவல் எதுவும் வெளியாகவில்லை.