சலவை இயந்திரத்திற்குள் ஒளித்து விளையாடிய போது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் போலந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது.
போலந்து நாட்டில் slupsk நகரில் மார்சல் என்ற 3 வயது சிறுவன் தனது சகோதரியுடன் இணைந்து ஒளிந்துபிடித்து விளையாடியபோது, சலவை இயந்திரத்துக்குள் ஒளிந்து கொண்டுள்ளான்.
அப்போது சலவை இயந்திரம் லாக் ஆனதால் அவனால் வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில் சகோதரி அவன் வெளியே சென்றிருப்பான் என நினைத்து சகோதரனை மறந்துவிட்டாள்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து சலவை இயந்திரத்தை தாய் திறந்து பார்த்தபோது சலவை இயந்திரத்தினுள் மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளான்.
உடனடியாக வைத்தியசாலைக்குச் கொண்டு சென்றபோது, சுவாசிப்பதற்கு சிறுவன் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 6 மணிநேரம் கழித்து குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.