மூன்று பெண்களை கத்தியால் குத்திய இளைஞன் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை!

பெண்ணொருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந் நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை தாக்குதல்தாரி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
மேலும் குறித்த நபர் 3 பெண்கள் மீது கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இந்நிலையில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் 28 வயதுடையவர் என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் நடைபெறுகிறது.