இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு களவாணி படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓவியா அறிமுகமாகி விமலுக்கு ஜோடியானார்.
இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
இந்தநிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. விமல், ஓவியாவே மீண்டும் இணைந்து நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் சற்குணமே தயாரித்திருக்கிறார். மேலும் முதல் பாகம் படம்பிடிக்கப்பட்டப் பகுதிகளிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.