கோர விபத்து- ஒன்றரை வயதுக் குழுந்தை உயிரிழப்பு- தாயார் அவசர சிகிச்சைப் பிரிவில்!!

முச்சக்கரவண்டியும் கன்ரர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. குழந்தையின் தாயார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து மட்டக்களப்பு வெல்லாவெளி குளுமுந்தன் பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இடம் பெற்றது என்று வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி களுமுந்ததன் பிரதேசத்தைச் சேர்ந்த சதீஸ்வரன் தஷ்சன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.