பிரபாகரன் விவகாரம்! பதவியை இழக்கும் அமைச்சர் விஜயகலா!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தற்போது சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயகலாவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி குறித்து அமைச்சர் விஜயகலா கருத்து வெளியிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியமை தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.