புதுக்குடியிருப்பில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் இளைஞன் கைது!

புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயன்ற குற்றச்சாட்டில் அதே இடத்தினை சேர்ந்த இளைஞன்  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் கடந்த 01.07.18 அன்று கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் 16 அகவை நிரம்பாத சிறுமி ஒருவரின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் சென்ற குறித்த சிறுமி அங்கு இருந்த 24 அகவையுடைய இளைஞனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் 01.07.18 அன்று குறித்த இளைஞனை கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீஸார் 02.07.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். இதன்போது குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன்  பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து மருத்துவ பரிசோதனை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.