புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படும் பிரதேசசபை உறுப்பினர்கள்!

image_pdfimage_print
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வீதி விளக்குகள் பிரதேசபை உறுப்பினர்களின் முன்மொழிவுடன் பொருத்தும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி விளக்குகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரதேச சபை உறுப்பினர்களினால் சபை கூட்டங்களில் முன்மொழியப்பட்ட நிலையில் பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் தவிசாளரின் வழிநடத்தலில் பிரதேசத்தில் முக்கியமாக மின் விளக்குகள் பொருத்தப்படும் இடங்களை தெரிவு செய்து மின்விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் 15 இலட்சம் ரூபா செலவில் 300 மின்விளக்குகளை கொள்வனவு செய்யப்பட்டடு அவற்றை பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை மின்சார சபையின் உதவியுடன் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.