இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசலின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.!

இன்று நள்ளிரவுமுதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கபடவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோலின் விலை 8 ரூபாவாலும் , டீசலின் விலை 9 ரூபாவாலும்  மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவின் பின்னர் ஒரு லீற்றர் பெற்றோல் (92) புதிய விலை ரூ.145, ஒரு லீற்றர் பெற்றோல் (95) புதிய விலை ரூ.155, ஒரு லீற்றர் டீசல் புதிய விலை ரூ.118, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் புதிய விலை ரூபா.129 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.