இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை! சீட்டிழுப்பு என்ற பெயரில் பணமோசடி செய்யும் கும்பல்!

image_pdfimage_print
இலங்கையில் உள்ளவர்களை மோசடியான முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சீட்டிழுப்பு ஒன்றில் பெருந்தொகை பணப் பரிசு வென்றுள்ளதாக கூறி நபர் ஒருவரிடம் 96000 ரூபாய் பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெனராகலை மெதகம பிரதேசத்தில் பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பில் கிடைத்த பரிசை துறைமுகத்தில் விடுவித்து கொள்வதற்கு பணம் அவசியம் என கூறி சந்தேக நபர் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்னஞ்சல் ஊடாக பணப் பரிசு தொடர்பில் பாதிக்கப்பட்ட நபருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, பேஸ்புக் ஊடாகவும் அறிமுகமாகும் நபர்கள் இலங்கையிலுள்ள பல பெண்களை ஏமாற்றி பெருந்தொகை பணம் பறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.