விஜயகலாவின் அதிரடி முடிவால் வியந்துபோன தென்னிலங்கை!

image_pdfimage_print
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமாச் செய்யவுள்ளார் என்று தெரிய வருகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பையும் தீவிர எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நேற்றைய தினம் தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் இன்று தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்று கூறப்படுகின்றது.தனக்கு எதிரான எதிர்ப்பலைகள் மற்றும் தான் சொல்லவந்த கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை ஆற்ற தயாராகி உள்ளார் என அவர் கூறினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.