தென்னிலங்கையில் கரிகாலன் படும் வேதனையினை பாருங்கள்! வீடியோ உள்ளே!

image_pdfimage_print
விடுதலைப்புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துப்பட அண்மையில் நடைபெற்ற அரச நிகழ்வு ஒன்றில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேச்சு தென்னிலங்கை அரசியல் சக்திகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
விஜயகலா அவர்கள் அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தென்னிலங்கை இனவாதிகள் கூக்குரலிட்டனர்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை தனது பதவியை இராஜனாமா செய்வதாக பிரதமரை சந்தித்து பதவிலகல் கடிதத்தையும் ஒப்படைத்திருந்தார் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள்.
இந்த நிலையில் நேற்று விஜயகலா மகேஸ்வரன் அவர்களது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக சிங்கள பகுதி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்பொம்மையை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொன்டிருந்தனர்.