இலங்கையில் வாகனங்களை வைத்திருப்போரிடம் வரி அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருமான வரி கொள்ளைகயை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று அரச கொள்ளையாக அமுல்படுத்தவுள்ளதாக உள்நாட்டு வருமான ஆணையாளர் அய்வன் திசாநாயக்க தெரிவித்தள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் வருமானம் உள்ள நபராக கணக்கிடப்பட்டுள்ளனர்.
வாகனம் வைத்திருப்பவர்கள் வரி செலுத்த கூடிய அளவு வருமானம் கொண்டவர்களாக கருதி அவர்களிடம் வரி அறவிடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உள்நாட்டு வருமான ஆணையாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதேவேளை வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்களிடமும் வரி அறவிடப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.