கால் தவறி கிணற்றில் வீழ்ந்த பாட்டி! மீண்டும் புத்துயிர் அளித்த இலுப்பையடி இளைஞர்கள்!

சற்று முன்னர் முல்லைத்தீவு, முள்ளியவளை 1ம் வட்டாரத்தில் (ஆலடி) வயது முதிர்ந்த பாட்டி தவறி கிணற்றில் வீழ்ந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த சம்பவத்தினை அறிந்த இலுப்பையடி இளைஞர்களின் அதிரடி நடவடிக்கையால் குறித்த மூதாட்டி காப்பாற்றப்பட்டு மாஞ்சோலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.
 குறித்த நேரத்துக்குள் பாட்டியை காப்பாற்றிய இலுப்பையடி இளைஞர் சங்க உறுப்பினர்களின் இந்த செயலை பிரதேச மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறித்த இளைஞர் சங்கம் பல ஆண்டுகளாக சமூக சேவை மற்றும் கிராம அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளில் முன் நின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.