குடும்பஸ்தரின் உயிரை காவுகொண்ட காட்டுயானை!

image_pdfimage_print
பொலநறுவை கல்லேல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியானார். 
கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற வேளையே, இவ்வாறு காட்டுயானைத் தாக்குதலுக்கு அவர் முகம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்தவர் 61 வயதுடையவர் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.