மதுபோதையில் தாயை தாக்கிய அந்தணருக்கு கிடைத்த தண்டணை!

யாழ்ப்பாணத்தில் அந்தணர் ஒருவரை 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் மன்று உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மதுபோதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் அந்தணர் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார்.
குறித்த அந்தணர் தினமும் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுவதாகவும் தாயையும் தாக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அந்தணர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
முன்னர் ஒரு தடவையும் அவர் நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தைக் கவனத்தில் எடுத்த நீதிமன்று, அந்தணரை 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்துமாறு சமுதாயம் சார் சீர் திருத்தல் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.