முல்லைத்தீவு பகுதியில் விபத்து ! 19 வயது இளைஞன் பலி!

முல்லைத்தீவு 03 ஆம் கட்டை மஞ்சல் பாலத்தடியில் 07.07.18 அன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி இருவர் காயம்! முல்லைத்தீவு முள்ளிவளை முதன்மை வீதியில் 03ஆம் கட்டை மஞ்சல் பாலத்தடியில் அதிவேகமாக உந்துருளியில் பயணித்த கொக்கிளாயினை சேர்ந்த     மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில்  முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் கொக்குளாயினை சேர்ந்த 19 அகவையுடைய ர.விஜிதரன் என்ற இளைஞன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஏனைய இரண்டு இளைஞர்களும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த விபத்து சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

மாத்தளன் பகுதியில் 07.07.18 கடலில் உயிரிழந்த கடற்தொழிலாளியான குறித்த இளைஞர்களின் உறவினரின் உடலத்தினை மருத்துவமனைக்கு பார்க்கசென்ற வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது