கோரவிபத்தில் சிக்கிய யாழ் பயணிகள் பேருந்து 60 பயணிகள் படுகாயம்!

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, கொகரல்ல பகுதியில் நேருக்கு நேர் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த பேருந்தும் எம்பிலிபிட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.