இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு!

image_pdfimage_print

எரிபொருள்களின் விலை சூத்திரம் இன்று (10) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையே இன்று மாலை நடைபெற்ற சந்திப்பையடுத்து இதற்கான உத்தரவு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இன்று நள்ளிரவுமுதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கபடவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோலின் விலை 8 ரூபாவாலும் , டீசலின் விலை 9 ரூபாவாலும்  மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவின் பின்னர் ஒரு லீற்றர் பெற்றோல் (92) புதிய விலை ரூ.145, ஒரு லீற்றர் பெற்றோல் (95) புதிய விலை ரூ.155, ஒரு லீற்றர் டீசல் புதிய விலை ரூ.117, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் புதிய விலை ரூபா.129 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.