முல்லைத்தீவில் கடலில் மீன்பிடித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! மீனவர்கள் அச்சத்தில்!

முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரையில் இருந்து, மீன்படிப்பதற்கு சென்ற 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவர் கடல் கொந்தளிப்பால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தெப்பம் ஒன்றை பயன்படுத்தியே மீன்படி தொழிலை மேற்கொண்டதாகவும் அப்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று காலை கொழும்பில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.