வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து ஐவர் படுகாயம் ஒருவா் பலி!

வவுனியா புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள-துடன் ஒருவா் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புளியங்குளம் இராமனுார் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும் கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்-கள். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.