நாளையும், நாளை மறுதினமும் வடக்கு முழுவதும் மின்தடை!!!

நாளையும், நாளை மறுதினமும் வடக்கு முழுவதும் மின்தடை. வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் புதிய மின்மார்க்கம் நிர்மானிக்கப்படுவதன் காரணமாக எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் வடமாகாணம் முழுவதும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இரு தினங்களிலும் காலை-08 மணி முதல் மாலை-5.30 மணி வரை வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா,மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் மின்சார ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் புதிய மின்மார்க்கம் அமைக்கப்படுவதாகவும், இதன் பொருட்டே குறித்த இரு தினங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.