முல்லை. புதுக்குடியிருப்பில் மக்களை வியப்பில் ஆழ்த்திய விநாயகர்!

முல்லை. புதுக்குடியிருப்பு ஆலடி விநாயகர் ஆலயத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.இன்று இந்த நிகழ்ந்துள்ளதாக ஆலயப் பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர்.
கைவேலி ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவகால விசேட பூஜைகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணியளவில் விநாயகர் தளத்தில் ஏற்றப்பட்ட விளக்கு எண்ணெய் இல்லாமல் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலயத்தில் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதற்குச் சென்ற பிரதம குருக்கள் ஆலயத்தின் கதவுகளை இன்று காலை திறந்து பார்த்தபோது நேற்று மாலை 6.00 மணியளவில் ஏற்றிவைத்த விளக்கு அணையாமல் எரிவதை கண்டுள்ளார்.உடனே அருகில் நின்ற அடியவர்களுக்கு இந்த அதிசயக்காட்சியை காண்பித்துள்ளார்.
அடியவர்கள் இந்த அற்புத காட்சியை பார்த்தபோது விளக்கில் ஒரு துளி எண்ணை கூட இல்லாமல் அது தொடர்ந்தும் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்ததால் தாங்கள் மெய்சிலிர்த்துப்போனதாக தெரிவித்தனர்.
மேலும் இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட குறித்த ஆலயத்தில் தற்போது புனரமைப்பு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.