வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 18 வயது மதிக்கதக்க இளம் பெண் தற்கொலை!

சற்று முன்னர் கிடைத்த விசேட செய்தி:
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 18 வயது மதிக்கதக்க இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிய கிடைத்தது யாதெனில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளாதாகவும், சில தினங்களுக்கு முன்பு குறித்த மாணவி தனது பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளதாகவும் பின்னர் தனது வீட்டில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது.

குறித்த மாணவி கொலை செய்யப்பட்டாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பதற்கான தீவிர விசாரணையினை வவுனியா பொலிஸ் அதிகாரியிகள் மேற்கொண்டு வருகின்றனர்.