முள்ளியவளையிலுள்ள பிரபல்ய பாடசாலையில் குளவி தாக்குதலால் 43 மாணவர்கள் பாதிப்பு!

சற்றுமுன் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் குளவி கடித்து 43 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 20.07.2018  காலைவேளை பாடசாலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கையினை தொடர்ந்த போது பாடசாலை கட்டத்தில் இருந்த தேன்குளவி கூடு கலைந்து பாடசாலை மாணவர்களை கடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு 43 மாணவர்கள் குளவி கடிக்கி இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 10 மாணவர்கள் மருத்துவமனையில்  தங்கி சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடசாலை கட்டிடம் மற்றும் பாடசாலை வளாகத்தினை அண்டிய மரங்களில் பாரிய தேன்குளவி கூடுகள் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்சியாக இந்த குளவிகள் பாடசாலை வளாகத்தில் காணப்படுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும் குறித்த தேன்குளவிகூடுகள் அகற்றப்படாமல் இருப்பதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.