மாணவர்களின் வரவு குறைவு காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் மூடப்படுகின்றதா?

image_pdfimage_print

பேராதனை பல்கலைக்கழக பொறியியற் பீட இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைக்கான அனுமதி; விரிவுரைகளுக்கான வரவு குறைவாக இருந்த காரணத்தால் மாற்றப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து மாணவர்கள் செனட் கட்டிடத்தொகுதியின் முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று முதல் 2 மாதங்களுக்கு பேராதனை பல்கலைக்கழகம் மூடப்படுகின்றதெனவும் மாணவர்கள் இன்று (27.07.2018) மாலை 6மணிக்கு முன்பாக விடுதிகளை விட்டு வெளியேறும்படியும் பணிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வறிவித்தலை பல்கலைக்கழக உபவேந்தர் உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளார். மறு அறிவித்தல்கள் ஊடகங்கள் மூலமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.