சீனி வாங்கிய மக்களுக்கு எச்சரிக்கை!!! திருப்பி வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!!!


சீனி வாங்கிய மக்களுக்கு எச்சரிக்கை  திருப்பி வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் (02.08.2018) காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமேனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 வவுனியா சதோச விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியா வினை கொள்வனவு செய்து சதோச விற்பனை நிலையத்தில் வைத்துள்ளார். அதனை அங்கு பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் சீனி என நினைத்து விற்பனை செய்துள்ளார். இதன் அடிப்படையில் இன்று (02.08.2018) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் சீனி கொள்வனவு செய்த பொதுமக்களை அவற்றை உபயோகிக்க வேண்டாமேனவும் அவற்றை உடனடியாக மீள வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.