இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை!!!


இந்தோனேஷியாவின் தென்கிழக்கு லோலோனில் இன்று மாலை பலத்த நிலநடுக்கம் ஒன்றுக் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது 2 கிலோமீட்டர் ஆழத்திற்கும், 10.5 கி.மீ சுற்றுவட்டாரத்திலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பலம் வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேக்ஷியாவில் சுனாமி வரும் வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் லம்போக் தீவில் ஏற்படும் இரண்டாவது பலத்த நிலநடுக்கம் இதுவாகும்.

இந்தோனேஷியாவின் லம்போக் தீவில் உள்ள பாலி பகுதியில் கடந்த 29ஆம் தேதி பலத்த நிடுநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் இந்த நிலநடுக்கம் தொடர்பில் எந்த ஒரு எச்சரிக்கையும் விடப் படவில்லை என்பதுடன் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூட இலங்கை பற்றி எதுவும் குறிப்பிட வில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.