புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்திருந்த சகோதரர்கள் தாக்கப்பட்டனர்.


புலம்பெயர் நாடொன்றிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த சகோதரியைக் காணச் சென்ற உள்ளுரில் உள்ள சகோதரர்கள் தாக்கப்ப்பட்டனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இவர் உட்பட மற்றுமொரு சகோதரி, சகோதரன் மற்றும் உறவினர் ஆகிய மூவர் காயமடைந்து, சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலத்தின் பின்னர் புலம்பெயர் நாட்டில் வசித்த சகோதரி, நுணாவிலுக்கு வந்ததையடுத்து மீசாலை வடக்கில் வசிக்கும் அவரது சகோதரியும் சகோதரனும் குடும்பத்தாருடன் சென்றுள்ளனர். சகோதரியுடன் நீண்ட காலத் தொடர்பு இல்லாததால் வாசலில் வைத்து அங்கு நின்றவர்களால் தடுக்கப்பட்டுள்ளனர் .இதனால் எழுந்த வாக்குவாதம் மோதலாக மாறியதில் கூரான ஆயுதத்தினால் வெட்டியுள்ளனர்.

மீசாலை வடக்கிலிலிருந்து சகோதரியைக் காணச் சென்ற சகோதரனும், சகோதரியும் வெட்டுக்காயங்களுக்கும் மற்றும் தாக்குதலுக்கும் இலக்கான நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.