முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார்!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானார் என காவேரி மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், திராவிடக் கட்சியின் தலைவராகவும் இருந்த கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலிவுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல் நிலை மிக மோசமானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான தீவிர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவினதும், தமிழகத்தினதும் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி தனது 95வது வயதில் இன்று காலாமாகியுள்ளார்.
காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கூடியுள்ளனர்.