ஈரான் – அமெரிக்க நெருக்கடி நிலைமை எமது நாட்டிலும் பாதிப்புச் செலுத்தும் எனவும் இதனால் அடுத்து வரும் சில மாதங்களில் எரிபொருள் விலை எமது நாட்டில் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நேற்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார். முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். தங்க விலை தொடர்பில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தி வந்தாலும் வெளிநாட்டு வருமானங்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாட்டு வருமானங்களை அதிகரிக்கவுள்ள வழிகளை பெருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு விடயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரியாது. எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடும். இதற்கு முகம்கொடுக்கும் ஒரு நிலைமை குறித்தும் நாம் தயாராக வேண்டியுள்ளது.
அதேபோன்று அமெரிக்காவினதும் சீனாவினதும் வரி நெருக்கடி நிலைமையும் எமது பொருளாதாரத்தில் பாதிப்புச் செலுத்தும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்