முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்திலிருந்து நான்கு குற்றவாளிகள் தப்பி ஓட்டம் !


முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து 07.08.18 அன்று நான்கு கைதிகள் தப்பி ஓடியுள்ளார்கள் இவர்கைள தேடும் பணியில் முல்லைத்தீவு பொலீஸார்  மேற்கொண்ட நடவடிக்கையின் போது முக்கிய கைதிகள் இருவரை கைது செய்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள். இதில் குறிப்பாக கொலைக்குற்றவாளியும் களவுகளுடன் தொடர்புடைய முதன்மை கைதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் செல்வபுரம் பனங்கூடல் காட்டுப்பகுதியில்  ஒளித்து இருந்த வேளை முல்லைத்தீவு பொலீஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது நேற்று இரவு 07.08.18 கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.  ஏனைய இரண்டு கைதிகளும் தப்பி ஓடிவிட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.