இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோல், டீசல் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள-தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 2 ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய விலை திருத்தத்திற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 157 ரூபாவுக்கும் சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திரம் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, மீண்டும் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.