ஒஸ்லோவில் துணை முதல்வராக பதவி ஏற்கும் யாழ்ப்பாண பெண்!

யாழ்பாணத்தில் பிறந்து வளர்ந்த கம்சாயினி குணரத்னம் எனும் பெண் தற்போது நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் துணை முதல்வராக பதவி ஏற்கிறார்.

அரசியல் ஈடுபாடும் செயற்பாடும் மிக்க இவர், ஏற்கனவே நோர்வே தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத்தலைவராகவும் இளைஞர் அணித்தலைவராகவும் இருக்கிறார்.

அரசியல் பணிகளின் போது கடந்த 2011ல் நடந்த 72 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சம்பவ இடத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர். தற்போது அதிகளவு வாக்குகள் பெற்று துணைமுதல்-வராகியிருப்பது அந்நாட்டு மக்களை பெருமயடைய வைக்கிறது.