பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறிய ஆண்! பின்னர் நடந்தது என்ன?

பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் நிகழ்ந்துள்ளது.

கொழும்பை அண்மித்த புறநகர்ப் பகுதியான பிலியந்தலையைச் சேர்ந்த பெண்ணுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் திருமணத்தில் தோல்வி கண்ட குறித்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பத்திரிகை விளம்பரம் ஒன்றைப் பிரசுரித்துள்ளனர்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த ஒருவர் தான் திருமணம் செய்வதாக பெண்ணின் வீட்டில் வந்து கூறியுள்ளார். இரத்தினபுரியைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியின் மகன் என்றும் தான் தற்பொழுது பொறியியலாளராக இருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய நிலையில் ஒரு நாள் குறித்த பெண்ணின் மடிக் கணினியைப் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பெண்ணின் உந்துருளியையும் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் சில நாட்களின்பின் எவ்வித தொடர்புமின்றி மாயமாகியுள்ளார். இதனால் குழப்பமடைந்த பெண், பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

தற்பொழுது குறித்த நபரைத் தேடும் பணியில் மிரிஹான பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தற்பொழுது இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதால் பெற்றோர் தமது பெண் பிள்ளைகள் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.