வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகே இன்று காலை 10.00 மணியளவில் தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டனர்.
கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் 5 வயது, 7 வயதுடைய மகனுடன் தாயார் அயலவர் வீட்டிற்க்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் 5 வயதுடைய மகனையும் குறித்த பெண்ணையும் காணவில்லை என அயலவரின் வீட்டார் தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதுடைய தாயும், 5 வயதுடைய குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டதாகவும் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியுமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர், பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.