கிளிநொச்சியில் 10 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம்!!!

மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் பலி – கிளிநொச்சியில் சம்பவம்…!  கிளிநொச்சியில் கடும் காற்றின் காரணமாக முறிந்த மரத்தினை குடும்பத்தினர் இணைந்து வெட்டி அகற்ற முனைந்தபோது மரம் முறிந்து  10 வயதுச் சிறுவன் மீது  வீழ்ந்தமையினால் குறித்த சிறுவன்    பரிதாபகரமாக உயிரிழந்தான்.

குறித்த சம்பவத்தில்  விசுவமடுவைச்    சேர்ந்த மயில்நாதன் – எமில்டன் என்னும் சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவனாவார்.  குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது ,  கிளிநொச்சிப் பகுதியில் கடந்த இரு நாட்களாக கடும் காற்று வீசிவரும் நிலையில் வீட்டு முற்றத்தில் நின்ற மரத்தின் கிளை ஒன்று முறிந்து தொங்கியுள்ளது. அவ்வாறு இருந்த மரக்கிளையினை தறித்து அகற்ற குடும்பத்தவர் முயற்சி செய்துள்ளனர்.  இதன்போது கிளை திடீரென் முறிந்து சிறுவனின் தலையில் வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  இவ்வாறு கொண்டு சென்ற சிறுவனை பரிசோதித்த வைத்தியர் சிறிவனின் உயிர் ஏற்கனவே பிரிந்திருந்த்தனை உறுதி செய்தார். இவ்வாறு உயிரிழந்த சிறிவனின் உடல் தற்போது  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின்  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.