முல்லைத்தீவு கடற்கரையில் மீட்கப்பட்ட 600 கிலோ மீன்கள்!

முல்லைத்தீவு மாத்தளன் கடற்பகுதியில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட சுமார் 600 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாத்தளன் கடற்பகுதியில் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு விரைந்த திணைக்கள அதிகாரிகள் வாடியில் வைக்கப்பட்டிருந்த மீன் குவியல்களைக் கைப்பற்றினர்.