பொலிசாரைக் கண்டதும் ஹெரோயின் போதைப்பொருளை பெண் ஒருவர் விழுங்கியுள்ளார். இச்சம்பவம் பிலியந்தலை – மிரிஸ்வத்தை பண்டாரநாயக்க வீடமைப்பு தொகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அரங்கேறியுள்ளது.
பொலிசாரின் இந்த தேடுதலின் போது அதிகவலு கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். பொலிசார் குறித்த பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வீட்டைச் சுற்றி வளைத்து கதவைத் தட்டிய போது, கதவைத் திறந்த பெண், பொலிசாரை பார்த்ததும் தனது கையில் இருந்த ஹெரோயின் பக்கெற் ஒன்றை வாயில் போட்டு விழுங்கியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.