20.08.18 அன்று முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் இளம் யுவதி ஒருவர் காதல் பிரச்சனை காரணமாக அலரி விதை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பம் பற்றி தெரியவருகையில் தண்ணீரூற்று பகுதியில் வசிக்கும் 21 அகவையுடைய யுவதி காதல் பிரச்சனையினால் அலரிவிதையினை அரைத்து உட்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் அறிந்த அதே பிரதேசத்தினை சேர்ந்த காதலன் அதிகளவான மதுபோதைகுடித்து போதை தலைக்கேறி மயங்கி விழுந்த நிலையில் மாஞ்சோலை மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.