தமிழ் அரசியல்வாதி நீண்ட நாட்களாக செய்த அநாகரிகமான செயல்; கையும் களவுமாக பிடித்த மக்கள்!

image_pdfimage_print

தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்த்தரும் முன்னாள் வலி,கிழக்கு பிரதேசசபை தலைவரும் இன்னாள் உறுப்பினருமாகிய குடும்பஸ்த்தர் ஒருவர் இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த நிலையில் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக இருந்து அண்மையில் வெளியேறிய கட்சி ஒன்றின் அலுவலகம் யாழ்.நீர்வேலி பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்குள்

அக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர் நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் இளம் பெண் ஒருவரை அழைத்து வந்து அவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார். மக்கள் செறிந்து வாழும் பகுதியில் குறித்த

அரசியல்வாதியின் அநாகரிகமான நடத்தை குறித்து பொதுமக்கள் நீண்ட நாட்கள் அவதானித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குறித்த அரசியல்வாதி பெண்ணை அழைத்துக் கொண்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் கையும் களவுமாக இருவரையும் பிடித்து நையப் புடைத்துள்ளனர். பின்னர் குறித்த அரசியல்வாதியும் இளம் பெண்ணும் பொதுமக்களிடம் மன்றாட்டமாக மன்னிப்பு கோரியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.